தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தேங்கிய கழிவுநீர் அகற்றம்

 தேங்கிய கழிவுநீர் அகற்றம்

 தேங்கிய கழிவுநீர் அகற்றம்


ADDED : பிப் 21, 2026 06:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 06:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் பேரூராட்சி 2வது வார்டு கொன்னையடி விநாயகர் தெருவில் தேங்கியுள்ள கழிவு நீர் வாகனம் மூலம் அகற்றப்பட்டது.

முதுகுளத்துார் பேரூராட்சி 2வது வார்டு உட்பட்ட கொன்னையடி விநாயகர் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் வீட்டின் முன்பு கால்வாயில் குளம் போல் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் கொசுத் தொல்லையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

முறையான கால்வாய் வசதி இல்லாததால் கழிவு நீர் வீடுகளுக்கு முன்பு தேங்கியது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளி யானது. இதன் எதிரொலியாக பேரூராட்சி ஊழியர்கள் கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனம் மூலம் தினந்தோறும் தேங்கியுள்ள கழிவுநீரை சுத்தம் செய்கின்றனர்.

எனவே இப்பகுதியில் நிரந்தரமாக கழிவு நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us