/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கடலில் கழிவுநீர் கலப்பதால் மீன்களுக்கு ஆபத்து
/
ராமேஸ்வரம் கடலில் கழிவுநீர் கலப்பதால் மீன்களுக்கு ஆபத்து
ராமேஸ்வரம் கடலில் கழிவுநீர் கலப்பதால் மீன்களுக்கு ஆபத்து
ராமேஸ்வரம் கடலில் கழிவுநீர் கலப்பதால் மீன்களுக்கு ஆபத்து
ADDED : செப் 22, 2024 02:33 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடலோரத்தில் மீன் கம்பெனிகளின் கழிவுநீர் கலப்பதால் சுற்றுச்சூழல் மாசடைந்து மீன்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
மண்டபம் வடக்கு கடற்கரையில் இருந்து 400 விசைப்படகுகள், 100க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் பாக்ஜலசந்தி கடலில் மீன் பிடிக்கின்றனர்.
இக்கடற்கரையில் உள்ள மீன் கம்பெனிகளில் இறால், நண்டு, கணவாய் மீன்களை சுத்தம் செய்து இதன் கருநிற கழிவுநீரை குழாய்கள் மூலம் கடலில் விடுகின்றனர்.
இதனால் கடலோரத்தில் கடல்நீர் கருமை நிறத்தில் மாறி சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதனால் மீன்களுக்கு சுவாசப் பிரச்னை ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம், கடலோரத்தில் வசிக்க முடியாத சூழல் ஏற்படுவதால் மீன்வளம் முற்றிலும் அழியும் ஆபத்து உள்ளது.
கடல்நீர் மாசுபடிந்ததால் கடலோரத்தில் வாழும் கெளக்கான், கெழுத்தி, கீலி, ஊடகம் உள்ளிட்ட பல மீன்கள் முற்றிலும் காணாமல் போய்விட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
எனவே கடலில் கழிவுநீர் கலப்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.