/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பு: தடுக்க வலியுறுத்தல்
/
வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பு: தடுக்க வலியுறுத்தல்
வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பு: தடுக்க வலியுறுத்தல்
வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பு: தடுக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 21, 2025 05:34 AM

பரமக்குடி: -பரமக்குடி வைகை ஆற்றில் கழிவுநீர் தேங்கி, சீமை கருவேல மரங்கள், நாணல் வளர்ந்து காடாகி உள்ளதால், ஆற்றை சீர் செய்ய மக்கள் வலியுறுத்தினர்.
பரமக்குடி நகரின் பிரதான நீர் ஆதாரமாக வைகை ஆறு விளங்குகிறது. ஆனால் நகரில் இருந்து வெளியேற்றப்படும் பல லட்சம் லிட்டர் கழிவுநீர் வைகை ஆற்றில் கலக்கிறது.
தொடர்ந்து வைகை ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் கழிவு நீர் ஆற்று நீருடன் கலந்து செல்கிறது. இந்நிலையில் ஆங்காங்கே குட்டைகளாக தேங்கி நின்ற கழிவு நீர், கடந்த சில மாதங்களாக ஒன்றிணைந்து வற்றாத நீரோடையாக மாறி உள்ளது.
இதனால் ஒட்டுமொத்த ஆற்றின் மண்வளம் கெட்டு வீடுகளின் கிணறு ஆழ்குழாய் உள்ளிட்ட நீரூற்றுகள் துர்நாற்றம் வீசி வருகிறது. வரும் நாட்களில் வைகை ஆற்றில் சித்திரை திருவிழா காட்டு பரமக்குடி தொடங்கி ஆற்றுப்பாலம், காக்கா தோப்பு வரை நடக்க உள்ளது. கருவேல மரங்கள், கழிவு நீர் தேங்கி இருப்பது மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் உள்ளது.
நகராட்சி சார்பில் அவ்வப்போது திருவிழா காலங்களில் சீர் செய்யும் பணிகள் நடக்கிறது.
பொதுப்பணித்துறை கருவேல மரங்கள், நாணல் உள்ளிட்ட தேவையற்ற செடி, கொடிகளை ஒட்டுமொத்தமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.