/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் கழிவுநீர் தேக்கம்
/
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் கழிவுநீர் தேக்கம்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் கழிவுநீர் தேக்கம்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் கழிவுநீர் தேக்கம்
ADDED : ஜூலை 15, 2025 10:22 PM

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் கழிவுநீரால் சகதி தேங்கி துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அருவருப்புடன் நீராடுகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்து விட்டு அக்னி தீர்த்தத்தில் நீராடுகின்றனர்.
புனிதமான இந்த அக்னி தீர்த்தத்தில் தனியார் நடத்தும் தங்கும் விடுதி, கழிப்பறை கூடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலந்தது. இதனை தடுத்து தீர்த்தத்தின் புனிதம் காக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.
இதன்பின் நகராட்சி நிர்வாகம் கழிவு நீரை சுத்திகரித்து குழாய் மூலம் 100 மீ.,க்கு அப்பால் கடலில் விட்டது. இருப்பினும் தற்போது அக்னி தீர்த்த கடற்கரை நுழைவில் கழிவு நீரால் சகதி தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் சூழலில், பக்தர்கள் அருவருப்புடன் புனித நீராடி செல்கின்றனர். இதனை அகற்றி சுகாதாரம் பராமரிக்க நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் கண்டு கொள்ளவில்லை.