/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மகாசக்தி நகரில் மழை நீருடன் கழிவு நீர் தேக்கம்: சுகாதாரக்கேட்டில் மக்கள் அவதி

ADDED : நவ 30, 2024 06:45 AM

ராமநாதபுரம்; ராமநாதபுரம் சக்கரக்கோட்டை ஊராட்சி மகாசக்தி நகர் பகுதியில் மழை நீருடன்கழிவு நீர் தேங்கியுள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
சக்கரக்கோட்டை ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மகாசக்திநகர் பகுதியில் உள்ளன.
இங்குள்ள பகுதியில் மழை நீருடன் கழிவு நீரும் தேங்கியுள்ளது. இப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது.
சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தில் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ளதால் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் விஷ ஜந்துக்கள் வருகின்றன.
சிறுவர்கள் வீடுகளுக்குள் முடங்கும் அவல நிலை உள்ளது. சக்கரக்கோட்டை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குடியிருப்புகளுக்குள் தேங்கும் மழை நீரை வெளியேற்ற வேண்டும்.