/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவிபட்டினம் மீன் மார்க்கெட்டில் கழிவுநீர் தேக்கம் மக்கள் பாதிப்பு
/
தேவிபட்டினம் மீன் மார்க்கெட்டில் கழிவுநீர் தேக்கம் மக்கள் பாதிப்பு
தேவிபட்டினம் மீன் மார்க்கெட்டில் கழிவுநீர் தேக்கம் மக்கள் பாதிப்பு
தேவிபட்டினம் மீன் மார்க்கெட்டில் கழிவுநீர் தேக்கம் மக்கள் பாதிப்பு
ADDED : அக் 26, 2025 05:08 AM
தேவிபட்டினம்: தேவிபட்டினம் மீன் மார்க்கெட்டில் தேங்கி வரும் கழிவு நீரால் பொதுமக்களும், வியாபாரிகளும் சிரமம் அடைகின்றனர்.
கிழக்கு கடற்கரை சாலை தேவிபட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான மீனவர்கள் வசிக்கின்றனர். மீனவர்கள் தங்களது நாட்டுப் படகுகள் மற்றும் விசைப்படகுகள் மூலம் பிடித்து வரப்படும் மீன்களை, அங்குள்ள மீன் மார்க்கெட்டில் விற்பனை செய்கின்றனர்.
இந்நிலையில், மீன் மார்க்கெட் பகுதியில் முறையான கழிவு நீர் வெளியேறுவதற்கு வசதிகள் இல்லாததால் கழிவுநீர் தேங்குகிறது.
மேலும் அப்பகுதியில் தேங்கும் மீன் கழிவுகளையும் ஊராட்சி நிர்வாகம் முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்காததால் கழிவுநீருடன் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் வியாபாரிகளும், மீன் வாங்க செல்லும் பொதுமக்களும் கடுமையான பாதிப்பை சந்திக்கின்றனர். எனவே மீன் மார்க்கெட் பகுதியில் இருந்து கழிவுநீர் முறையாக வெளியேறுவதற்கு கழிவு நீர் கால்வாய் அமைப்பதுடன், தேங்கும் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.