/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வார்டில் ஆறாக கழிவுநீர் ஓடுது... குப்பை அள்ளுவது இல்லை: கவுன்சிலர்கள் குமுறல்
/
வார்டில் ஆறாக கழிவுநீர் ஓடுது... குப்பை அள்ளுவது இல்லை: கவுன்சிலர்கள் குமுறல்
வார்டில் ஆறாக கழிவுநீர் ஓடுது... குப்பை அள்ளுவது இல்லை: கவுன்சிலர்கள் குமுறல்
வார்டில் ஆறாக கழிவுநீர் ஓடுது... குப்பை அள்ளுவது இல்லை: கவுன்சிலர்கள் குமுறல்
ADDED : பிப் 17, 2024 04:52 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை பிரச்னைக்கு தீர்வுகாணப்படாததால் ரோட்டில் கழிவு நீர்ஆறாக ஓடுகிறது. குப்பை அள்ளுவதுஇல்லை. குடிநீரும் வரவில்லை என பல்வேறு குறைகளை கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம்நடந்தது. தலைவர் கார்மேகம் தலைமை வகித்தார்.கமிஷனர் அஜிதா பர்வீன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம்:
கவுன்சிலர் குமார், பா.ஜ.,: பாதாள சாக்கடை கழிவுநீர் பிரச்னையை தீர்க்க பல லட்சம் செலவு செய்ய தீர்மானம்கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் நகரில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. நகராட்சி கணக்கில் வராமல் சில இணைப்புகள்உள்ளதாக புகார் வருகிறது. அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
தலைவர்: அவ்வாறு நடக்க வாய்ப்பு இல்லை.விசாரிக்கிறோம். கழிவுநீர் தேங்கு இடங்களில் அகற்றப்படுகிறது.
காளிதாஸ், தி.மு.க.,: இந்திராநகர் கழிவு நீர் பம்பிங் ஸ்டேஷன் சரியாகசெயல்படவில்லை. உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்குவதால்மக்கள் சிரமப்படுகின்றனர்.
தலைவர்: இந்திரா நகரில் பம்பிங் ஸ்டேஷனில் 40, 70 எச்.பி. மோட்டார் இயக்குகிறோம். மண் அடைப்பால் பிரச்னை உள்ளது. விரைவில் சரிசெய்யப்படும்.
கமலக்கண்ணன், தி.மு.க.,: 12வது வார்டில் குப்பை சரியாக அள்ளுவதுகிடையாது. போதிய ஆள் இல்லாமல் ஒரு பெண் வண்டியைஇழுக்க சிரமப்படுகிறார். 87 பேர் பணிபுரிவது போல தெரியவில்லை எனக்கூறினார். அவரை தொடர்ந்துவார்டுகளில் சரியாக குடிநீர் வரவில்லை. ரோடு அமைக்கும்பணி சில இடங்களில் மட்டுமே நடக்கிறது.
வார்டு மக்கள் பாதாள சாக்கடையால் சிரமப்படுகின்றனர். இதனால்சொத்து, குடிநீர், சாக்கடை வரி கேட்டு வரும் அலுவலர்களிடம்மக்கள் பிரச்னை செய்கின்றனர் என கவுன்சிலர்கள் கூறினர்.
மணிகண்டன், காங்.,: வெளிப்பட்டணம் தாய்,சேய் நலவிடுதிக்கு இடம் வழங்கிய சோமசுந்தரம் செட்டியார் பெயரை மீண்டும் அவ்விடத்தில் கட்டப்படும் புதிய தாய், சேய் நல விடுதிக்கு வைக்க வேண்டும்.
தலைவர்: எனது வார்டிற்கு நுாறு ரூபாய் கூட செலவுசெய்யாமல் பிற வார்டுகளுக்கு முக்கியத்துவம் தருகிறேன்.கவுன்சிலர்கள் கூறிய பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.