/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மகளிருக்கான தையல் திறன் பயிற்சி
/
மகளிருக்கான தையல் திறன் பயிற்சி
ADDED : நவ 10, 2024 04:21 AM
ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் அருகே மண்டபம் யூனியன் பெருங்குளம் ஊராட்சியில் உள்ள சமுதாயக் கூடத்தில் தையல் திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்றவர்களுடன் கலந்துரையாடல் வாப்ஸ் மற்றும் ஒமேகா நிறுவனங்கள் சார்பில் நடந்தது.
ஒமேகா நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி கண்ணன் சுகந்தராமன் தலைமை வகித்தார். முதன்மை நிதி அலுவலர் நாராயணன் முன்னிலை வகித்தார். மூத்த துணைத்தலைவர் சுகந்த ரங்கராஜன், வாப்ஸ் தொண்டு நிறுவனத்தின் திட்ட இயக்குனர் இளமதி, அணித்தலைவர் ஆசைத்தம்பி, பெருங்குளம் ஊராட்சி தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கலந்து கொண்ட கிராமப்புற பெண்கள் பனை ஓலையில் செய்யப்பட்ட கலைநய பொருட்கள் மற்றும் தையல் பயிற்சி மூலம் உருவாக்கிய ஆடைகளை காட்சிபடுத்தி வைத்திருந்தனர். சுயதொழில் முன்னேற்றம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் ராஜாராம், சுந்தர்ராஜன், ராஜேஸ்வரி செய்திருந்தனர்.