/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
'மினி பார்' ஆக மாறி வரும் நிழற்குடைகள்
/
'மினி பார்' ஆக மாறி வரும் நிழற்குடைகள்
ADDED : ஏப் 13, 2025 04:16 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம், அதனை சுற்றியுள்ள ஊர்களில் உள்ள பஸ் ஸ்டாப் நிழற்குடைகளை சிலர் மது அருந்தும் மினி பாராக பயன்படுத்துவதால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
மாவட்ட தலைநகரான ராமநாதபுரம் -ராமேஸ்வரம் ரோடு, மதுரை ரோடு உள்ளிட்ட இடங்களில் கிழக்கு கடற்கரை சாலை, வழுதுார், காரிக்கூட்டம், வாலாந்தரவை, உச்சிபுளி, பெருங்குளம், அச்சுந்தன்வயல், கருங்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயணிகள் வசதிக்காக கட்டடங்களாகவும், கூடாரங்களாகவும் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்விடத்தில் இரவு நேரங்களில் சிலர் மது அருந்துவது, உணவு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். உணவு குப்பை, மதுபாட்டிகள் சிதறி கிடக்கின்றன. இதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் நிழற்குடைக்குள் செல்ல முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே போதை ஆசாமிகளை கண்டறிந்து விரட்ட போலீசார் இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.

