ADDED : பிப் 08, 2025 04:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆனந்துார் அருகே கருங்குடி விலக்கு வழியாக கருங்குடி, சுத்தமல்லி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. கருங்குடி விலக்கு பஸ் ஸ்டாப்பில் இருந்து வெளியூர் செல்ல வேண்டிய நிலையால் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பயணியர் நிழற்குடை பராமரிப்பு இல்லாததால் நிழற்குடை சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதனால் பஸ் ஸ்டாப் வரும் பயணிகள் மழை, வெயிலில் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.