/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரம்ஜான் பண்டிகைக்காக ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
/
ரம்ஜான் பண்டிகைக்காக ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ADDED : மார் 27, 2025 03:08 AM

ராமநாதபுரம்:ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் நேற்று நடந்த சந்தையில் ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை நடந்தது.
மார்ச் 31ல் ரம்ஜான் பண்டிகை கொண்டாட இருப்பதை முன்னிட்டு ராமநாதபுரம் அருகே சக்கரகோட்டை- கீழக்கரை ரோட்டில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு சந்தைக்கு வெள்ளாடுகள் விற்பனைக்கு குவிந்தன.
ராமநாதபுரம் மட்டுமின்றி மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர்.
ஒரு ஆடு ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை விற்கப்பட்டது. 10 கிலோ உள்ள ஆடு ரூ.8000த்தில் இருந்து ரூ.10 ஆயிரம் வரை விற்றது. ரூ.2 கோடிக்கு மேல் வியாபாரம் நடந்தது.
ஆடுகளின் விலை வழக்கத்தை விட ரூ.2000 முதல் ரூ.3000 வரை விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறினர்.