/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பக்தர்களிடம் மென்மையான போக்கு கடைப்பிடிக்கப்படுமா சிவனடியார்கள் கோரிக்கை

ADDED : ஜன 02, 2026 05:20 AM
உத்தரகோசமங்கை: ஜன. 2--: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா இன்று கோலாகலமாக நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தின் சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், யாத்ரீகர்கள் வருகின்றனர்.
ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகம் சார்பில் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் பக்தர்கள் வரிசையாக செல்வதற்கு ஏற்ற வகையில் பல இடங்களில் கம்புகள் கட்டப்பட்டு வரிசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பல ஆயிரம் பக்தர்கள் காத்திருந்து மரகத நடராஜப் பெருமானின் சந்தனம் களையப்பட்ட திருமேனியை தரிசனம் செய்வதற்காக வருகின்றனர்.
சிவனடியார்கள் கூறியதாவது: ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகள் பாராட்டத்தக்கது.
இந்நிலையில் ஒரு சில போலீசார் பக்தர்களை ஒருமையில் பேசுவதை தவிர்க்க வேண்டும். கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்படுவதை தவிர்க்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் மென்மையான போக்கை கடைபிடித்து பக்தர்களை அணுகுவதற்கு போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன் வர வேண்டும் என்றனர்.