/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் காஸ் கசிவால் அதிர்ச்சி
/
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் காஸ் கசிவால் அதிர்ச்சி
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் காஸ் கசிவால் அதிர்ச்சி
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் காஸ் கசிவால் அதிர்ச்சி
ADDED : ஆக 30, 2025 03:47 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் காஸ் கசிவு ஏற்பட்டதால் அங்கிருந்தவர்கள் பதறி ஓடினர்.
ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையானது அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவனையாக தரம் உயர்த்தப்பட்டு புதிய கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதனால் வளாகத்தில் உள்ள பழைய கட்டடங்களை அகற்றும் பணி தற்போது நடந்து வருகிறது. நேற்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பழைய கட்டடத்தை இடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள ஆக்ஸிஜன் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. உடனே அங்கு நின்று கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியேறி, 'கேஸ் லீக்காகிறது, யாரும் நெருப்பு பற்ற வைக்க வேண்டாம்' என அறி வுறுத்தினர். மருத்துவமனை தொழில்நுட்ப அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது அது ஆக்ஸிஜன் சிலிண்டரில் இருந்து வரக்கூடிய குழாய் என கண் டறிந்தனர்.
ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு விரைந்து காசை ஆப் செய்ய முயன்றனர். அறை பூட்டியிருந்ததால் சாவி எடுத்து வரும்படி மருத்துவமனை செக்யூரிட்டியிடம் கேட்டனர். செக்யூரிட்டி வரக் காலதாமதம் ஆனதால் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று சிலிண்டரை நிறுத்தினர். இதை யடுத்து அப்பகுதியில் காஸ் லீக் நின்றது.
மருத்துவமனையின் பழைய கட்டடங்களில் உள்ள குழாய்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டு களுக்கு மேல் ஆகிறது. அதன் இணைப்பை உறுதி செய்ய வேண்டும் என மக்கள் தெரிவித்தனர்.

