/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஐஸ்கிரீம் கடையை உடைத்து திருட்டு செக்போஸ்ட் அருகே அதிர்ச்சி
/
ஐஸ்கிரீம் கடையை உடைத்து திருட்டு செக்போஸ்ட் அருகே அதிர்ச்சி
ஐஸ்கிரீம் கடையை உடைத்து திருட்டு செக்போஸ்ட் அருகே அதிர்ச்சி
ஐஸ்கிரீம் கடையை உடைத்து திருட்டு செக்போஸ்ட் அருகே அதிர்ச்சி
ADDED : மே 28, 2025 11:26 PM
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் போலீஸ் செக்போஸ்ட் பகுதியில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு உள்ள பகுதியில் ஐஸ்கிரீம் கடையை உடைத்து ரூ.3000 பணம் திருடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அருகே மேதலோடை உமையன்வலசையை சேர்ந்தவர் முருகேசன் 50. இவர் பட்டணம்காத்தான் போலீஸ் செக் போஸ்ட் பகுதியில் பால் மற்றும் ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் இரவு முருகேசன் கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
நேற்று காலை முருகேசன் மகன் ரோகித் 24, கடையை திறக்க வந்த போது கடையில் பூட்டு இல்லாததையும், கதவு திறக்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது அலைபேசியின் மூலம் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அதிகாலை 3:00 மணிக்கு மர்ம நபர் முகத்தில் துணியை போர்த்திக்கொண்டு கடையின் பூட்டை உடைத்து, கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3000த்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து முருகேசன் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
இதன் அருகில் உள்ள செக்போஸ்ட்டில் போலீசார் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் நிலையில் கடையின் பூட்டை உடைத்து திருடியிருப்பது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.