தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு

ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு

ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு


ADDED : செப் 25, 2025 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2025 04:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம் : - ராமேஸ்வரத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் மார்ஷல் திரைப்பட படப்பிடிப்பை 30 நாள்களுக்கும் மேலாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதியில் 30 நாட்களுக்கும் மேல் நடத்த உள்ள நிலையில் கடந்த இரு நாட்களாக ராமேஸ்வரம் எஸ்.கே.பட்டியில் உள்ள சர்ச் வளாகத்தில் ஏராளமான மாட்டு வண்டி, குதிரை வண்டிகளை வைத்து பஞ்சாயத்து நடப்பது போல் சூட்டிங் நடத்தப்பட்டது. இப்படத்தில் கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். படத்தை ராமேஸ்வரத்தை சேர்ந்த தமிழ் இயக்குகிறார். திரைப்பட சூட்டிங் நடக்கும் பகுதியில் நடந்து செல்லும் உள்ளூர் மக்கள் வேடிக்கை பார்க்கவோ, அலைபேசியில் படம் எடுப்பதை படக்குழுவினர் தடுத்து கெடுபிடி செய்வதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us