/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம்
/
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம்
ADDED : நவ 02, 2025 10:47 PM
சாயல்குடி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, சாயல்குடி நகரில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் கவர், பச்சை தாள்களை பறிமுதல் செய்து 12 கடைகளுக்கு அபராதம் விதித்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சாயல்குடி நகர் டீக்கடைகளில் பிளாஸ்டிக் கவரில் டீ மற்றும் காபி, பால் உள்ளிட்டவை சூடாக பார்சல் செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது எனவும், இதுகுறித்து உரிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அக்., 31ல் தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் காரணமாக உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சாயல்குடி நகரில் பேரூராட்சி அலுவலர்கள், போலீசார் ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 32 ஓட்டல்கள், டீக்கடைகள், புரோட்டா கடைகள், பிரியாணி கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 68 கிலோ அளவுள்ள அரசால் தடை செய்யப்பட்ட கேரிபேக்குகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பச்சை தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டு 12 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
குறைகளை சுட்டிக்காட்டி 15 நாட்களுக்குள் சரிசெய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது. 8 கிலோ எடையுள்ள சமைத்த அதிக செயற்கை வண்ணம் கொண்ட கலப்பட உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டன.

