/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை
ADDED : அக் 14, 2024 04:00 AM
பெருநாழி : பெருநாழி அருகே கோவிலாங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் பற்றாக்குறையால் நோயாளிகள் தவிக்கின்றனர்.
இங்கு சுற்று வட்டார கிராமங்களான செங்கற்படை, புதுக்கோட்டை, ஓ.கரிசல்குளம், எருமைக்குளம், எம்.புதுக்குளம் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகின்றனர்.
நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வரும் நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை தொடர்ந்து நிலவுகிறது. கோவிலாங்குளம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் உக்கிரபாண்டியன் கூறியதாவது: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர் வாரத்திற்கு இருமுறை மட்டுமே வருகிறார்.
மற்ற நாட்களில் மாற்றுப் பணியாக வெளியூர் சென்று விடுகிறார். இந்நிலையில் அவசர அத்தியாவசிய முதலுதவி உள்ளிட்ட சிகிச்சைகளுக்காக கிராம மக்கள் சாயல்குடி, கடலாடி, கமுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே பொதுமக்களின் நலன் கருதி மருத்துவத் துறையினர் கூடுதல் டாக்டரை நியமித்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.