/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை
/
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை
ADDED : நவ 12, 2024 04:44 AM
ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை துவக்கப்பட்டு மூன்றாண்டுகள் ஆகும் நிலையில் புதிய கட்டடங்கள், அனைத்து சிகிச்சைப்பிரிவுகளும் இன்னும் முழுமையாக செயல்படவில்லை. போதுமான டாக்டர்களும் இல்லாத நிலை தான் தொடர்கிறது.
பல்வேறு சிகிச்சை பிரிவுகளில் தேவையான டாக்டர்கள், டெக்னீசியன்கள், நர்ஸ்கள் பற்றாக்குறை நிலவுகிறது. போதுமான மருத்துவ உபகரணங்களும் இல்லாத நிலை தான் உள்ளது. இந்நிலையில் இங்கு குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது.
தினமும் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் வெளி நேயாளிகளாகசிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் அறுவை சிகிச்சைக்கு டாக்டர்கள் இல்லாத அவல நிலை உள்ளது.
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கானஅறுவை சிகிச்சை டாக்டர் இல்லாததால் அவசர அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளை காப்பாற்ற வழியின்றி பெற்றோர் தவிக்கின்றனர்.
வேறு வழியின்றி குழந்தைகளை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்கின்றனர்.
இதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. குழந்தைகளின் பெற்றோர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் குழந்தைகள் அறுவை சிகிச்சை டாக்டரை உடனடியாக நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.