/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் ஊருணிகளை பராமரிக்க ஆர்வம் காட்டுங்கள்; கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகிறது

ADDED : மார் 18, 2025 10:55 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதாரமாக உள்ள ஊருணிகள் பராமரிக்கப்படாமல் கழிவுநீர் கலந்து கொசுக்கள் உற்பத்தி கூடாரமாக மாறியுள்ளன. அவற்றை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ராமநாதபுரம் நகராட்சி மற்றும் அருகேயுள்ள சக்கரகோட்டை, பட்டணம்காத்தான், சூரன்கோட்டை ஊராட்சிகளில் ஊருணிகள் பல உள்ளன. இவற்றின் தண்ணீரை மக்கள் குளிக்க, துவைக்க பயன்படுத்தினர். ஊரின் நிலத்தடி நீர் மட்டத்திற்கு ஆதராமாகவும் ஊருணிகள் உள்ளன.
சிலவற்றை தவிர்த்து பெரும்பாலான ஊருணிகளை தொடர்ந்து பராமரிக்கப்படாமல் அப்படியே விட்டுள்ளனர். இதனால் தண்ணீரை உறிஞ்சும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. மழை நீரை முழுமையாக சேகரிக்க முடியாத நிலை உள்ளது.
குறிப்பாக மதுரை ரோட்டில் உள்ள செம்மங்குண்டு ஊருணி மழைநீரில் நிரம்பினாலும் கழிவுநீர் கலந்து கொசு உற்பத்தி மையமாகிஉள்ளது. பட்டணம்காத்தான் ஊராட்சியில் ராமேஸ்வரம் மெயின் ரோட்டிலுள்ள சோத்து ஊருணி பராமரிக்கப்படாமல் கழிவுநீர் கலந்து செப்டிக் டேங்க் குளமாக மாறி கொசுக்கள் உற்பத்தி கூடாரமாக உள்ளது.
இதனால் குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதுடன் கொசுத்தொல்லையால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இனிவரும் கோடை காலத்தை பயன்படும் வகையில் குப்பையை அகற்றி தண்ணீரை பாதுகாக்க ஊருணிகளை சுத்தம் செய்ய வேண்டும்.
கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், சம்பந்தப்பட்ட நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.