/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கொடிக்கம்பத்தை அகற்றிய எஸ்.ஐ., மின்சாரம் தாக்கி பலி
/
கொடிக்கம்பத்தை அகற்றிய எஸ்.ஐ., மின்சாரம் தாக்கி பலி
கொடிக்கம்பத்தை அகற்றிய எஸ்.ஐ., மின்சாரம் தாக்கி பலி
கொடிக்கம்பத்தை அகற்றிய எஸ்.ஐ., மின்சாரம் தாக்கி பலி
ADDED : நவ 01, 2024 04:17 AM

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிளக்ஸ் போர்டு, கொடி கம்பங்களை அகற்றிய போது மின்சாரம் தாக்கி பணியில் இருந்த போலீஸ் எஸ்.ஐ., சரவணன் பலியானார்.
பரமக்குடி பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், மன்னர் மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு பிளக்ஸ் போர்டுகள் மற்றும் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விழா நிறைவுற்ற நிலையில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணி முதல் கொடிக் கம்பங்களை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
பரமக்குடி டவுன் போலீஸ் எஸ்.ஐ.,க்கள் சரவணன் மற்றும் கணேசன் உள்ளிட்டோர் இரவு 1:00 மணிக்கு ஆற்றுப்பாலம் அருகில் தியேட்டர் முன்பு கொடிகளை அகற்றினர். அப்போது அங்கிருந்த இரும்பு பைப்பில் கட்டப்பட்ட கொடியை மேலே துாக்கி கழற்றினர். அருகில் இருந்த மின் டிரான்ஸ்பார்மரில் இரும்பு கம்பிபட்டு மின்சாரம் தாக்கிய நிலையில் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் எஸ்.ஐ., சரவணன் பலியானார்.
கமுதி அருகே கே.நெடுங்குளம் கிராமத்தில் வசிக்கும் இவருக்கு மனைவி விஜயலட்சுமி, ஒரு மகன், மகள் உள்ளனர். 2011ல் போலீசாக சேர்ந்து 2016 பிப்., 26 முதல் எஸ்.ஐ., யாக பணிபுரிந்து வந்தார். தீபாவளிக்கு முதல் நாள் இரவில் நடந்த இந்த சம்பவம் போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.