ADDED : மே 28, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் கோவிலேந்தல் கருப்பையா 40. சப்பாணியேந்தல் சாத்தையா 46, இடையில் கருவேல மரம் விறகு வெட்டுவதில் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
நேற்று காலை ஓடைக்கால் நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்த சாத்தையாவை கருப்பையா அரிவாளால் வெட்டியுள்ளார். சாத்தையாவின் டூவீலரில் அமர்ந்து சென்ற குலமாணிக்கம் கவிதா 45, என்பவரையும், கருப்பையா வெட்டினார்.
இதில் சாத்தையா, கவிதா கையில் காயம் ஏற்பட்டது. இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கருப்பையாவை ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.