/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாலத்தில் பக்கவாட்டு சுவர் சேதம்
/
பாலத்தில் பக்கவாட்டு சுவர் சேதம்
ADDED : டிச 09, 2024 05:13 AM

வாலிநோக்கம்: வாலிநோக்கம் அருகே அடஞ்சேரியில் இருந்து சேரந்தை செல்லும் வழியில் 100 மீ., நீளத்திற்கு மேம்பாலம் உள்ளது. 2019ல் கட்டப்பட்ட இந்த சிற்றோடை மேம்பாலத்தின் பக்கவாட்டு பாதுகாப்பு சுவர் சேதமடைந்துள்ளது.
வாலிநோக்கம் கழிமுகத்துவாரம் செல்லும் தரவைப் பகுதியில் இருந்து வரும் வெள்ள நீர் செல்லும் வழியில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஏர்வாடியில் இருந்து அடஞ்சேரி, வாலிநோக்கம், சேரந்தை, கீழக்கிடாரம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்வதற்கான பிரதான சாலையாக உள்ளது.
சேரந்தை கிராம மக்கள் கூறியதாவது: பாலத்தின் கைப்பிடி சுவர் சேதமடைந்த நிலையில் உள்ளது. கனரக வாகனங்கள், அரசு பஸ்கள் அடிக்கடி செல்கின்றன. எனவே பக்கவாட்டு சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.