ADDED : செப் 27, 2026 02:09 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டமாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் தேசிய சைகை மொழி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து கலெக்டர் சிவகுரு பிரபாகரன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் தேசிய சைகை மொழி தினம் செப்.,23 முதல் 29 வரை சைகை மொழி வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதில், சைகை மொழிகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், உலகளவில் காது கேளாதோர் சமூகத்தை அணுகுவதற்கும் கல்வியை மேம்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இதன்படி விழிப்புணர்வு ஊர்வலம் டி-பிளாக் வரை சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரன், அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் பலர் பங்கேற்றனர்.
