/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சைகை மொழி வார விழா விழிப்புணர்வு ஊர்வலம்
/
சைகை மொழி வார விழா விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : செப் 26, 2024 04:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் காது கேளாதோர் சங்கம் சார்பில் சைகை மொழி வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து துவங்கிய சைகை மொழி விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு காது கேளாதோர் சங்கத் தலைவர் ரவி சங்கர் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இணைச் செயலாளர் சரத்பாபு, செயற்குழு உறுப்பினர்கள் மகேந்திரன், செல்வராஜ், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். காதுகேளாதோர் இதில் பங்கேற்றனர். ஊர்வலம் கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி, பாரதி நகர் பகுதியில் நிறைவு பெற்றது.