ADDED : மார் 27, 2025 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரியில் பயிலும் மாணவர்கள் முகவை சங்கமம் என்ற தலைப்பில் ராமநாதபுரத்தில் நடந்து வரும் தமிழ்நாடு அரசு 7வது புத்தகத் திருவிழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
முதல்வர் ராஜசேகர், பேராசிரியை மரகதம் ஒருங்கிணைப்பில் மாணவர்கள் சபிபுல்லா, வீரமணிகண்டன், குமார், சரவணன், ஆனந்த பிரகாஷ், அஜய், முகமது ஷாபி ஆகியோர் மவுன நாடகத்தின் மூலம் விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினர்.
புத்தகம் மற்றும் நாளிதழ்களை மாணவப் பருவத்தில் படிப்பதால் ஏற்படக்கூடிய பலன்களும், பொது அறிவு சிந்தனைகளும் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.