/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சிகளில் எளிமைப்படுத்தப்பட்ட கணக்கு: தொடரும் நடைமுறை சிக்கல் பி.எப்.எம்.எஸ்., முறைக்கு மாற்ற கோரிக்கை
/
ஊராட்சிகளில் எளிமைப்படுத்தப்பட்ட கணக்கு: தொடரும் நடைமுறை சிக்கல் பி.எப்.எம்.எஸ்., முறைக்கு மாற்ற கோரிக்கை
ஊராட்சிகளில் எளிமைப்படுத்தப்பட்ட கணக்கு: தொடரும் நடைமுறை சிக்கல் பி.எப்.எம்.எஸ்., முறைக்கு மாற்ற கோரிக்கை
ஊராட்சிகளில் எளிமைப்படுத்தப்பட்ட கணக்கு: தொடரும் நடைமுறை சிக்கல் பி.எப்.எம்.எஸ்., முறைக்கு மாற்ற கோரிக்கை
ADDED : ஜன 17, 2025 05:06 AM
திருப்புல்லாணி: ஊராட்சிகளில் எளிமைப்படுத்தப்பட்ட கணக்குகளால் நடைமுறை சிக்கல்கள் தொடர்வதால் பி.எப்.எம்.எஸ்., முறைக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் 429 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஜன.5ல் ஊராட்சி தலைவர்கள், துறைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள், தலைவர்கள் பதவிக்காலம் நிறைவடைந்தது.
தற்போது டி.என்.பாஸ் எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட கணக்கு நடைமுறையால் தொடர் சிக்கல் நிலவுவதாக ஊராட்சி செயலாளர்கள் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது: முன்பு பி.எப்.எம்.எஸ்., எனப்படும் பொது நிதி மேலாண்மை அமைப்பு மூலமாக ஆன்லைனில் பண பரிவர்த்தனை நடந்து வந்தது. இதற்கு ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் ஆகியோரிடம் கையெழுத்து பெற்று ஊராட்சி செயலாளர் வங்கியில் வழங்கினால் பணிகள் செய்த நிறுவனத்திற்கு தொகைகள் விடுவிக்கப்படும்.
2023 நவ., மாதத்தில் தமிழக அரசு அறிமுகப்படுத்திய டி.என்.பாஸ் எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட கணக்கு நடைமுறையால் ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி செயலாளர் ஆகியோர்களுக்கு 3 வகையான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் மூலமாக ஓ.டி.பி., சொல்லி பணம் ஆன்லைன் மூலமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டது.
தற்போது ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் டி.என்.பாஸ்., முறையால் ஊராட்சி தலைவருக்கு பதில் பி.டி.ஓ.,வும், துணைத்தலைவருக்கு பதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலரும் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் ஓ.டி.பி., முறையை பின்பற்றுகின்றனர்.
இதனால் 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள பி.டி.ஓ.,க்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய பணம் விடுவிப்பதற்கான தொகைக்கு பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். இதனால் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு பணம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்த வழியில்லாத நிலை உள்ளது.
எனவே முன்பிருந்த பி.எப்.எம்.எஸ்., எனப்படும் ஆன்லைன் மூலமாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பெரும்பாலான ஊராட்சிகளில் அத்தியாவசிய செலவினங்களை மேற்கொள்ள இயலாமல் திணறிப் போய் உள்ளோம் என்றனர்.