/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆதார் எப்போ சார் தருவீங்க; நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம்
/
ஆதார் எப்போ சார் தருவீங்க; நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம்
ஆதார் எப்போ சார் தருவீங்க; நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம்
ஆதார் எப்போ சார் தருவீங்க; நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம்
ADDED : ஜூலை 24, 2025 10:23 PM
ராமநாதபுரம்; ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் கூடுதல் ஆதார் சேவை மையம் இல்லாததால் மக்கள் ஆதார் அட்டை பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
எல்காட், அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள கலெக்டர் அலுவலகம், வருவாய் அலுவலகம், தாலுகா அலுவலகத்தில் நிரந்தர ஆதார் மையங்கள் செயல்படுகிறது.
புதிதாக ஆதார் பதியவும், ஆதாரில் திருத்தம் செய்யவும் மக்கள் அதிகம் ஆதார் சேவை மையத்தை நாடுகின்றனர்.
ராமநாதபுரத்தில் கலெக்டர் அலுவலகத்திலும், தாலுகா அலுவலகத்தில் நிரந்தர ஆதார் பதிவு மையங்கள் உள்ளன. தாலுகா அலுவலக ஆதார் பதிவு மையம் நகரின் மையப்பகுதியில் உள்ளது.
வங்கி கணக்கு துவங்க, ரேஷன் கார்டு பெறுவதற்கு, அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு என அனைத்து பயன்பாட்டுக்கும் ஆதார் கட்டாயம் தேவைப்படுகிறது.
இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் முதியோர், பெண்கள் அருகில் உள்ள தாலுகா மையத்தை அதிகம் நாடுகின்றனர். இங்கு போதிய பணியாளர்கள் இல்லாததால் ஒருவருக்கு ஆதார் பதிவு செய்ய அரை மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளது.
இன்டர்நெட் பழுதாகிவிட்டால் ஒரு மணி நேரம் கூட ஆகலாம்.
இதனால் கைக்குழந்தையுடன் வரும் பெண்கள், முதியோர் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.
இது குறித்து புகார் தெரிவிக்கலாம் என்றால் உதவி எண்ணை பாதி கிழித்து விட்டனர்.
அதனால் தாலுகா அலுவலகத்தில் கூடுதலாக ஒரு ஆதார் மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள னர்.