ADDED : ஏப் 05, 2026 04:43 PM
அ நிறம் | அளவு
திருவாடானை:திருவாடானையில் உள்ள ராமர் பஜனை மடத்தில் சீதா ராமர் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக பஜனை மடம் வாழை மரங்களால் அலங்கரிக்கபட்டது. தொடர்ந்து மணமகன் கோலத்தில் ராமரும், மணமகள் கோலத்தில் சீதாவுடன் உள்ள போட்டோ அலங்கரிக்கபட்டது.
சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சீதாதேவியின் கழுத்தில் ராமபிரான் திருமாங்கல்யநாண் பூட்டும் வைபவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கபட்டது.
