/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மார்ச் 14, 15ல் கச்சத்தீவு திருவிழா சிவகங்கை பிஷப்பிற்கு அழைப்பு
/
மார்ச் 14, 15ல் கச்சத்தீவு திருவிழா சிவகங்கை பிஷப்பிற்கு அழைப்பு
மார்ச் 14, 15ல் கச்சத்தீவு திருவிழா சிவகங்கை பிஷப்பிற்கு அழைப்பு
மார்ச் 14, 15ல் கச்சத்தீவு திருவிழா சிவகங்கை பிஷப்பிற்கு அழைப்பு
ADDED : ஜன 29, 2025 01:29 AM
ராமேஸ்வரம்:மார்ச் 14, 15ல் நடைபெறும் இலங்கை கச்சத்தீவு சர்ச் திருவிழாவில் இந்திய பக்தர்கள் பங்கேற்க உள்ள நிலையில் சிவகங்கை கத்தோலிக்க பிஷப்பிற்கு யாழ்ப்பாணம் பிஷப் அழைப்பு விடுத்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் இருந்து 21 கி.மீ.,ல் பாக்ஜலசந்தி கடலில் அமைந்துள்ள கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவில் பல ஆண்டுகளாக இந்திய, இலங்கை பக்தர்கள் பங்கேற்றனர். 1974ல் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த பிறகு நிபந்தனையுடன் இந்திய பக்தர்கள் பங்கேற்றனர்.
அதன் பின் 1984ல் இலங்கையில் இனப்போர் தீவிரமடைந்ததும் கச்சத்தீவு விழாவுக்கு இலங்கை தடை விதித்தது. 2009ல் இலங்கையில் அமைதி திரும்பியதும் மீண்டும் இந்திய பக்தர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து படகில் புறப்பட்டு விழாவில் பங்கேற்கின்றனர்.
இந்த ஆண்டு மார்ச் 14ல் கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் முன் விழா கொடி ஏற்றப்பட்டு மார்ச்15ல் திருவிழா சிறப்பு திருப்பலி பூஜை நடக்க உள்ளது. இதில் இந்திய பக்தர்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் இதில் பங்கேற்க சிவகங்கை கத்தோலிக்க பிஷப் லுார்து ஆனந்தத்திற்கு இலங்கை யாழ்ப்பாணம் கத்தோலிக்க பிஷப் ஜோசப் ஜெபரத்தினம் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.