/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிவகாளியம்மன் கோயில் அக்னி சட்டி ஊர்வலம்
/
சிவகாளியம்மன் கோயில் அக்னி சட்டி ஊர்வலம்
ADDED : ஜூன் 05, 2025 01:06 AM
முதுகுளத்துார்: முக்குளத்துார் சங்கரபாண்டி ஊருணி வடகரையில் அமைந்துள்ள சிவகாளியம்மன், ராஜாத்தி அம்மன், நாகாத்தம்மன், பத்ரகாளியம்மன் கோயில் வருஷாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு கணபதி ஹோமம் துவங்கி வருஷாபிஷேகம், அபிஷேகம் நடந்தது.
பின் காந்திசிலை அருகில் உள்ள பிள்ளையார் கோயிலில் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து பஸ் ஸ்டாண்ட், வழிவிடு முருகன் கோயில்,செல்வி அம்மன் கோயில் தெரு உட்பட முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.
பின் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது.108 விளக்கு பூஜை நடந்தது. விழாவில் முதுகுளத்துார் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.