/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சுவர் இடிந்து சிறுமி உட்பட ஆறு பேர் பலி: மழையால் நேர்ந்த சோகம்
/
சுவர் இடிந்து சிறுமி உட்பட ஆறு பேர் பலி: மழையால் நேர்ந்த சோகம்
சுவர் இடிந்து சிறுமி உட்பட ஆறு பேர் பலி: மழையால் நேர்ந்த சோகம்
சுவர் இடிந்து சிறுமி உட்பட ஆறு பேர் பலி: மழையால் நேர்ந்த சோகம்
ADDED : டிச 14, 2024 02:21 AM

பரமக்குடி:பரமக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இரு நாட்களாக கன மழை பெய்தது. நேற்று காலை 8:00 மணிக்கு மேலாய்க்குடியைச் சேர்ந்த பால்ராஜ் - ஜெயலட்சுமி தம்பதியின் மகள் கீர்த்திகா 6, வீட்டிற்கு வெளியே வந்துள்ளார். இந்நிலையில் அவர்களது ஓட்டு வீட்டின் மண் சுவரின் கீழ்பகுதி சுவர் நனைந்து அருகிலுள்ள கோயில் சுவருடன் சாய்ந்தது.
அப்போது அருகில் குறுகிய சந்துப்பகுதியில் நடந்து சென்ற சிறுமியின் தலையில் சுவர் விழுந்ததில் சம்பவ இடத்தில் கீர்த்திகா பலியானார். கீர்த்திகா அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். சுவர் இடிந்து மாணவி பலியானது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. எமனேஸ்வரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
* இதேபோல் அரியலுார் மாவட்டம் வெளிப்பிரிங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் வேங்கையன் 82, மேலவெளி கிராமத்தை சேர்ந்த வசந்தா 50, கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புலவனுார் ஊராட்சி ராசாபாளையத்தை சேர்ந்தவர் சீதாராமன் 90, நாகை மாவட்டம் செம்பியன் மகாதேவியை சேர்ந்தவர் முருகதாஸ் மகன் கவியழகன் 13, சுவர் இடிந்து பலியாகினர்.