தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ஆயுதங்களுடன் சுற்றியஆறு வாலிபர்கள் கைது

ஆயுதங்களுடன் சுற்றியஆறு வாலிபர்கள் கைது

ஆயுதங்களுடன் சுற்றியஆறு வாலிபர்கள் கைது


UPDATED : அக் 21, 2026 04:50 PM

ADDED : அக் 21, 2026 04:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 04:50 PM ADDED : அக் 21, 2026 04:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் நகர் பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 6 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் வல்லபை நகர் பகுதியில் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் அச்சுறுத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. கேணிக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்ற போது சிலர் தப்பியோட முயன்றனர். அவர்களை பிடித்து விசாரித்த போது சட்டைக்குள்ளும், இடுப்பிலும் கத்தி, வாள் போன்ற ஆயுதங்கள் இருந்தது.

விசாரணையில் ராமநாதபுரம் பட்டணம்காத்தான், ஆத்மநாதசுவாமி நகரை சேர்ந்த ரமேஷ் கண்ணா மகன் மிதுன் ரஞ்சன் 19, மணிமாறன் மகன் ஹரிஷ் வீரராஜ் 19, மணிமாறன் மகன் கிஷோர் 19, ஆதம் நகர் கேசவன் மகன் திவ்யஸ் 19, தினைகுளம் ஹமீது சுபையர் மகன் முகமது அகனப் 19, சின்னக்கடை ஷேக் அலாவுதீன் மகன் முகமது நலீப் 19, ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது ஆயுத சட்டப் பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us