தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மாற்றுத்திறனாளிகள் திறன் வளர்ச்சி மறுவாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 மாற்றுத்திறனாளிகள் திறன் வளர்ச்சி மறுவாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 மாற்றுத்திறனாளிகள் திறன் வளர்ச்சி மறுவாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : மார் 10, 2026 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 05:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: மத்திய அரசின் சமூக நீதி, அதிகாரமளிப்பு அமைச்சகத்தின் மாற்றுத் திறனாளிகள் அதிகாரமளிப்பு துறையின் கீழ் செயல்படும் மதுரையில் உள்ள மாற்றுத்திறனாளி களுக்கான திறன் வளர்ச்சி, மறுவாழ்வு, மேம்பாட்டிற் கான ஒருங்கிணைந்த பிராந்திய மையம், ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து பர்ப்பிள் பேர் - 2026 திறன் வளர்ச்சி, மறுவாழ்வு குறித்த விழிப் புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தனியார் பள்ளி யில் நடந்த நிகழ்ச்சியை மதுரை சி.ஆர்.சி., இயக்குநர் ஜெயசீலி ப்ளோரா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

20 ஸ்டால்களில் அமைக்கப்பட்டு, உதவி சாதனங்கள், மறுவாழ்வு சேவைகள், அரசு நலத் திட்டங்கள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள், வாழ்வாதார வாய்ப்புகள் மற்றும் மாற்றுத் திற னாளிகள் தயாரித்த பொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.

அனைவருக்கும் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது. விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள், அவர்களின் பெற்றோர், பராமரிப் பாளர்கள், மறுவாழ்வு நிபுணர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், சமூக அமைப்புகளின் பிரதி நிதிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us