ADDED : டிச 17, 2024 03:51 AM

கமுதி: கமுதி தனி ஆயுதப்படை பயிற்சி மையத்தில் கடலோர பாதுகாப்பு குழுமம் மீனவ இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.
கடலோர பாதுகாப்பு குழுமம் டி.எஸ்.பி., பிரதாபன் தலைமை வகித்தார். மீன்வளம், மீனவர் நலத்துறை துணை இயக்குனர் பிரபாவதி முன்னிலை வகித்தார்.
இந்த பயிற்சி மையத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 பேர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 13 பேர் என 40 மாணவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள உள்ளனர். 90 நாட்கள் பயிற்சி வகுப்பு நடைபெறும்.
பயிற்சி வகுப்பில் மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம், ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
பயிற்சி முடித்த மீனவ இளைஞர்களுக்கு கடற்படை மற்றும் கடலோர காவல் படை வேலையில் சேர முன்னுரிமை அளிக்கப்படும். கடலோர காவல் படை போலீசார், அதிகாரிகள், இளைஞர்கள் பங்கேற்றனர்.
