மீனவ இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு
மீனவ இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு
ADDED : செப் 22, 2026 04:12 PM
கமுதி: கமுதி தனி ஆயுதப்படை பயிற்சி மையத்தில் கடலோர பாதுகாப்புக் குழுமம் மீனவ இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது. கடலோர பாதுகாப்பு குழுமம் ஏ.டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சிவகுமார், டி.எஸ்.பி., கணேசன் முன்னிலை வகித்தனர். இந்த பயிற்சி மையத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 பேர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 10 பேர் என 40 மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
போலீசுடன் இணைந்து டெல்டா ஸ்குவாட் பவுண்டேஷன் சார்பில் 90 நாட்கள் வகுப்பு நடைபெறும். மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம், ஊக்கத்தொகை, உடல் தகுதி, ஒழுக்கம், பாதுகாப்பு பணிகளுக்கு தேவையான திறன்களை மேம்படுத்தும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முடித்த மீனவ இளைஞர்களுக்கு கடற்படை, கடலோர காவல்படை வேலையில் சேர முன்னுரிமை அளிக்கப்படும்.
உடன் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி, எஸ்.ஐ., கண்ணன், போலீஸ்காரர்கள் மதியழகன், ராமர் உட்பட பலர் உடன் இருந்தனர்.
