/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
/
மீனவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : செப் 13, 2025 11:26 PM
தொண்டி: தொண்டி அருகே கடற்கரை கிராமங்களில் மீனவப் பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
தொண்டி அருகே புதுக்குடி, காரங்காடு, மோர்பண்ணை, திருப்பாலைக்குடி ஆகிய கடற்கரை மீனவப் பெண்களுக்கு மீன்வளம் மற்றும் மீன்வர் நலத்துறை ராமநாதபுரம் (வடக்கு) சார்பில் பாக்., மற்றும் மன்னார் வளைகுடா மீனவர்களுக்கான சிறப்பு மறுவாழ்வு திட்டத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
இதில் இறால் ஊறுகாய் தயாரிப்பு, வலை பின்னுதல், கடற்பாசி வளர்த்தல் நடந்தது. 1500க்கும் மேற்பட்டவர்களுக்கு இப் பயிற்சி அளிக்கப் பட்டது.
ராமநாதபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் ராஜேந்திரன், மீன்வளத்துறை ஆய்வாளர்கள் அபுதாகிர், சிந்துஜா, மரைன் எஸ்.ஐ., அய்யனார் முன்னிலையில் இப்பயிற்சி அளிக்கப்பட்டது.