ADDED : மார் 02, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே என்.மங்கலத்தில் பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தில் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் முத்தமிழரசன் துவக்கி வைத்தார். விசும்பூர், கல்விழியேந்தல், கீழ்க்குடி, கட்டவிளாகம், இலுப்பக்குடி, பாகனுார், என்.மங்கலம், பதனக்குடி, ஓரியூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நீரினை பயன் படுத்துவோர் சங்கத்தின் பொறுப்பு, சங்கத்தை வழிநடத்தும் முறைகள், ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து சமூக மேம்பாட்டு வல்லுநர் சாம்சன், லியோஜான் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

