ADDED : நவ 26, 2026 08:39 PM
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் தாலுகா கிளை சார்பில் பள்ளி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களிடையே துளிர் திறன் அறிதல் தேர்வு நடந்தது. மாணவர்கள் அறிவியல் ஆர்வத்தை துாண்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் துளிர் திறனறிதல் தேர்வு நடக்கும். அதன் படி இன்று (நவ.,26) ராமேஸ்வரம் கரையூர் அரசுப் பள்ளி, தங்கச்சிமடம், பேக்கரும்பு துவக்கப் பள்ளி, பாம்பன் சின்னப் பாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வேர்க்கோடு புனித ஜோசப் பள்ளியில் திறனறிதல் தேர்வு நடந்தது.
இத்தேர்வில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களை தேர்வு செய்து அறிவியல் களப்பயணம், அறிவியல் அறிஞர்களுடன் சந்திப்பு நிகழ்வு நடக்கும். பிற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஓராண்டு துளிர் அறிவியல் புத்தகம் வழங்கப்படுகிறது. தேர்வு ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க ராமேஸ்வரம் தாலுகா நிர்வாகிகள் சசிகுமார், ஜெரோம், செந்தில்குமார் செய்திருந்தனர்.
