/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோழி தீவனத்திற்கு வெளியூர் செல்லும் சிறிய மீன்கள்: டன் ரூ.30,000க்கு விற்பனை
/
கோழி தீவனத்திற்கு வெளியூர் செல்லும் சிறிய மீன்கள்: டன் ரூ.30,000க்கு விற்பனை
கோழி தீவனத்திற்கு வெளியூர் செல்லும் சிறிய மீன்கள்: டன் ரூ.30,000க்கு விற்பனை
கோழி தீவனத்திற்கு வெளியூர் செல்லும் சிறிய மீன்கள்: டன் ரூ.30,000க்கு விற்பனை
ADDED : ஆக 20, 2025 02:46 AM

கீழக்கரை,:ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மன்னார் வளைகுடா கடற்கரை கிராமங்கள் மூலம் உணவுக்கு உதவாததாக கருதப்படும் சிறிய மீன்கள் தனியாக உலரவைக்கப்பட்டு கோழி தீவனத்திற்காக வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. டன் ரூ.30ஆயிரம் வரை விற்கப் படுகிறது.
கீழக்கரை மன்னார் வளைகுடா கடற்கரை பகுதிகளில் ஏராளமான மீனவர் கிராமங்கள் உள்ளன. கீழக்கரை, களிமண்குண்டு, தோப்புலசை, பெரியபட்டினம், சேதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பிடிபட்டு உணவுக்கு உதவாததாக கருதப்படும் மீன்கள் தனியாக உலர வைக்கப்படுகின்றன.
இம்மீன்கள் பெரும்பாலும் உலரவைக்கப்பட்டு பொடியாக்கி கோழி தீவனமாக பயன்படுகிறது. இவை தீவன மீன் என அழைக்கப் படுகின்றன.
சிறிய வகை மீன்களான நகரை, ஊழி, காரா, நெத்திலி, சூடை, சாளை மீன் உள்ளிட்ட மீன்கள் ஓரிடத்தில் உலர்த்தி வைக்கப்பட்டு அவை கருவாடாக மாறிய பின் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.
மன்னார் வளைகுடா கடற்கரை ஓரமுள்ள உலர் நிலங்களில் அவை காய வைக்கப்பட்டு கருவாடாக மாற்றிய பின்பு கோழி தீவனத்திற்காக சரக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு டன் சிறிய வகை கருவாடு கழிவு வகை மீன்கள் ரூ. 30ஆயிரம் வீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மீன் வியாபாரிகள் கூறியதாவது: நாமக்கல், தாராபுரம், கோவை, பல்லடம் பகுதிகளில் இயங்கும் கோழிப் பண்ணைகளில் இவ்வகை கருவாடுகள் நன்கு அரைக்கப்பட்டு தீவனங்களுடன் கலக்கப்பட்டு இரையாக வைக்கப்படுகிறது என்றனர்.