/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போர் பதட்டத்திலும் இலங்கைக்கு கஞ்சா கடத்தல் ஜரூர் : பாதுகாப்பு கேள்விக்குறி
/
போர் பதட்டத்திலும் இலங்கைக்கு கஞ்சா கடத்தல் ஜரூர் : பாதுகாப்பு கேள்விக்குறி
போர் பதட்டத்திலும் இலங்கைக்கு கஞ்சா கடத்தல் ஜரூர் : பாதுகாப்பு கேள்விக்குறி
போர் பதட்டத்திலும் இலங்கைக்கு கஞ்சா கடத்தல் ஜரூர் : பாதுகாப்பு கேள்விக்குறி
ADDED : மே 09, 2025 03:20 AM
ராமேஸ்வரம்:போர் பதட்டம் நிலவும் நிலையிலும் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தல்காரர்கள் கஞ்சா உள்ளிட்டவற்றை தடையின்றி கடத்தி செல்வதால் கடல் வழி பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
ஏப்.,22ல் காஷ்மீர் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை தகர்த்தது. இச்சூழலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடல் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதால் கடல் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டது.
ஆனால் ராமேஸ்வரம் முதல் இலங்கை வரை 25 முதல் 40 கி.மீ., உள்ளதால் மீனவர்கள் போர்வையில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாக்ஜலசந்தி கடல், மன்னார் வளைகுடா கடலில் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை, தமிழக மரைன் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே அசாதாரண சூழல் நிலவும் நிலையில் 10 நாட்களாக ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து கஞ்சா, பீடி இலைகள், இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றை கடத்தல்காரர்கள் அச்சமின்றி இலங்கைக்கு கடத்திச் சென்றனர்.
இவற்றை இலங்கை கடற்படை வீரர்கள் யாழ்ப்பாணம் பகுதியில் 3 இடத்திலும், கல்பட்டியா பகுதியில் 2 இடத்திலும் பறிமுதல் செய்து அந்நாட்டு கடத்தல்காரர்களை கைது செய்தனர். ராமேஸ்வரம் பகுதியில் இருந்து கடத்தும் பொருட்களை இங்கு தடுக்காமல் பாதுகாப்பு படையினர் கோட்டை விடுகின்றனர்.
தற்போது போர் பதட்ட சூழலில், அதுவும் விசைப்படகில் மீன்பிடிக்க தடை விதித்த தருணத்திலும் கடத்தலை தடுக்காமல் இருப்பது கடல்வழி பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.
எனவே பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடலில் பாதுகாப்பை பலப்படுத்தி அந்நியர்கள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு படைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.