ADDED : செப் 22, 2026 04:03 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொட்டகுடி கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். நேற்று முன்தினம் அங்கிருந்த ஜன்னல் வழியாக நாகப்பாம்பு நுழைந்தது. குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியில் வெளியேறினர். திருவாடானை தீயணைப்புத்துறைக்கு தெரிவிக்கபட்டது.
நிலைய அலுவலர் முருகானந்தம் மற்றும் வீரர்கள் சென்று மையத்திற்குள் 4 அடி நீளத்தில் இருந்த நாகப் பாம்பை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
