ADDED : ஜன 29, 2025 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை :   திருவாடானை பகுதியில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக கடும் குளிரால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய நிலங்களிலும் பனி படர்ந்து காணப்பட்டது. மக்கள் வீடுகளில் முடங்கினர்.
நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் வாகனங்களை மிதமான வேகத்தில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி இயக்கினர். சாலைகளில் புகைமூட்டம் போல காணப்பட்டது.

