/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோட்டில் பூசணிக்காயை உடைக்காதீர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூக ஆர்வலர்
/
ரோட்டில் பூசணிக்காயை உடைக்காதீர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூக ஆர்வலர்
ரோட்டில் பூசணிக்காயை உடைக்காதீர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூக ஆர்வலர்
ரோட்டில் பூசணிக்காயை உடைக்காதீர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூக ஆர்வலர்
ADDED : செப் 30, 2025 03:53 AM

திருவாடானை: ரோடுகளில் பூசணிக்காய், தேங்காய் உடைக்க வேண்டாம் என மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்த சரவணன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.மதுரை மாவட்டம் மேலுார் கொட்டாம்பட்டி அருகே வலைச்சேரிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் 55.
இவர் ரோடுகளில் பூசணிக்காய், தேங்காய் உடைப்பது, பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் விபத்துகள் குறித்து மக்கள் கூடும் இடங்களில் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
நேற்று திருவாடானை பஸ்ஸ்டாண்டில் ஒரு கையில் பூசணிக்காயையும், மறுகையில் தேங்காயும், பதாகைகளை வைத்து பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சரவணன் கூறியதாவது:
திருஷ்டி கழிப்பதற்காக ரோடுகளில் பூசணிக்காயை உடைக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது வாகன ஓட்டிகளை வழுக்கி விழச் செய்து விபத்துக்களை ஏற்படுத்தும். அதே போல் தேங்காயையும் ரோடுகளில் உடைக்கிறார்கள். ஆயுத பூஜை அன்று இது போன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. இறந்தவரின் உடலை துாக்கி செல்லும் போது பூக்கள் வீசப்படுகிறது.
இச்சம்பவங்களால் டூவீலர்களில் செல்பவர்கள் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
கண் திருஷ்டி பூசணிக்காய், தேங்காய் உள்ளிட்டவற்றை ரோடுகளில் உடைப்பதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு ஊராக சென்று மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.
நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் ஓட்டுக்கு பணம், பொருள் வாங்க வேண்டாம். நல்லவர்களுக்கு ஓட்டளியுங்கள் என்பதையும் வலியுறுத்தி வருகிறேன் என்றார்.