ADDED : ஜன 02, 2025 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் சமூக ஆர்வலர்கள் சங்க மூன்றாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
தலைவராக ஜலால் காசிம், செயலாளராக ஷாஜகான், பொருளாளராக அப்துல் ஜப்பார், கவுரவ தலைவராக சகுபர் அலி மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் கல்வி, சுகாதாரம் குறித்து பேசப்பட்டது. எஸ்.பி.பட்டினத்தில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை அடிக்கடி சந்தித்து முறையிடுவது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சாதிக் நன்றி கூறினார்.

