/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சமூக நல்லிணக்க பொன் ஏர் பூட்டும் விழா
/
சமூக நல்லிணக்க பொன் ஏர் பூட்டும் விழா
ADDED : ஏப் 18, 2025 11:24 PM

கமுதி:
கமுதி கீழராமநதி கிராமத்தில் ஹிந்து, முஸ்லிம்கள் இணைந்து சமூக நல்லிணக்கத்தோடு சித்திரை மாதத்தில் பொன் ஏர் பூட்டும் விழா நடந்தது.
விவசாயம் செழிப்பாக இருப்பதற்கு சித்திரை மாதம் நல்ல நாள் பார்க்கப்பட்டு பொன் ஏர் பூட்டும் விழா நடத்துவது வழக்கம். இதனை முன்னிட்டு கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள், டிராக்டர்கள் ஊர்வலமாகவும் பள்ளிவாசல் முன்பு துவா செய்யப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு சென்றனர்.
பின்பு விவசாய நிலத்தில் தேங்காய் உடைத்து பூஜைகள் செய்யப்பட்டு உழவு செய்யப்பட்டு நவதானியங்கள், நெல் விதைத்தனர். விழாவில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் ஹிந்து, முஸ்லிம் இணைந்து சமூக நல்லிணக்கத்தோடு பொன் ஏர் பூட்டும் விழா நடத்துவது வழக்கமாக நடக்கிறது.

