/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
லாந்தையில் பஸ்சில் சென்று மண் பரிசோதனை முகாம்
/
லாந்தையில் பஸ்சில் சென்று மண் பரிசோதனை முகாம்
ADDED : ஆக 11, 2025 03:46 AM

உத்தரகோசமங்கை: - உத்தரகோசமங்கை அருகே லாந்தை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் நடமாடும் மண் பரிசோதனை பஸ் வேளாண் துறை சார்பில் இயக்கப்பட்டது. இந்த பஸ்சில் உடனடியாக அறிக்கை பெறப்பட்டு விவசாயிகளுக்கு மண் ஆரோக்கிய அட்டை வழங்கப்பட்டது.
விவசாயிகளின் நிலத்தில் உள்ள மண்ணின் தரத்தை பரிசோதித்து நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், பி.எச்., அளவு உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் உடனுக்குடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
இதனடிப்படையில் நிலத்திற்கு ஏற்ற உரம் மற்றும் பயிர் சாகுபடி உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டது.
மண் பரிசோதனை முடிவுகளுடன் கூடிய மண் ஆரோக்கிய அட்டைகளை வேளாண் இணை இயக்குனர் பாஸ்கர மணியன் விவசாயிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குனர் செல்வம், வேளாண் அலுவலர் ஹேமலதா உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர் பழனி முருகன் செய்திருந்தார்.