வீடுகளுக்கு சோலார் பேனல்: தபால் அலுவலகங்களில் முன்பதிவு
வீடுகளுக்கு சோலார் பேனல்: தபால் அலுவலகங்களில் முன்பதிவு
ADDED : மார் 02, 2024 05:03 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து தபால் அலுவலகங்களிலும் மத்திய அரசின் மானியத்தில் சூரிய ஒளி (சோலார்) மின்சாரம் வீடுகளுக்கு வழங்கும் திட்டத்திற்கான முன்பதிவு மார்ச் 8 வரை நடக்கிறது. மத்திய அரசு நாடு முழுவதும் 1 கோடி குடும்பங்களுக்கு சோலார் பேனல் பொருத்த திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கூரையில் சோலார் பேனல் நிறுவ ரூ.30,000 முதல் ரூ.78,000 வரை மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பொதுமக்கள் மாவட்டத்தில் அனைத்து தபால் அலுவலகங்களிலும் மார்ச் 8 வரை முன்பதிவு செய்யலாம்.
இதற்கு தங்களது மின் நுகர்வோர் எண், மின்கட்டண ரசீது நகல், தொலைபேசி எண்ணுடன் தபால்காரர்கள் அல்லது தபால் அலுவலகங்களை அணுகலாம் என ராமநாதபுரம் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார்.
