/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராணுவ வீரர்கள் நலமுடன் வாழ காஷ்மீரிலிருந்து நடைபயணம்
/
ராணுவ வீரர்கள் நலமுடன் வாழ காஷ்மீரிலிருந்து நடைபயணம்
ராணுவ வீரர்கள் நலமுடன் வாழ காஷ்மீரிலிருந்து நடைபயணம்
ராணுவ வீரர்கள் நலமுடன் வாழ காஷ்மீரிலிருந்து நடைபயணம்
ADDED : செப் 20, 2024 11:52 PM

திருவாடானை:ராணுவ வீரர்கள், அவர்கள் குடும்பத்தினர் நலமுடன் வாழ வேண்டி மத்தியபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சந்நியாசி சிவ்சிவாக் சிவ்கரண் 40, நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
மத்தியபிரதேச மாநிலம் பத்தேபூர் மாவட்டம் கஹோர்லி பகுதியைச் சேர்ந்த சிவ்சிவாக் சிவ்கரண் காஷ்மீரிலிருந்து தேசிய கொடியுடன் நடைபயணத்தை துவங்கினார். வடமாநிலங்கள் வழியாக நேற்று ராமநாதபுரம் மாவட்டம் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தை கடந்து சென்றார்.
அவருக்கு சின்னக்கீரமங்கலத்தில் தேவகோட்டை வடக்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் ராமசுப்பையா, ஹிந்து முன்னணி நகர் தலைவர் சுரேஷ், பா.ஜ., பொறுப்பாளர் விஜய ராஜா உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
சிவ்சிவாக்சிவ்கரன் கூறியதாவது: நம் ராணுவ வீரர்கள் மழை, வெயில் பாராமல் குடும்பத்தினரை பிரிந்து நாட்டைப்பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ வீரர்களும், அவர்களின் குடும்பத்தினரும் நலம் பெற வேண்டியும், தேசிய ஒருமைப்பாடு மேலோங்கவும் 2022 மார்ச் 25ல் காஷ்மீரில் நடை பயணத்தை துவக்கினேன்.
சண்டிகர், மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக கடந்த வாரம் தமிழகம் வந்தேன். தற்போது ராமேஸ்வரத்தை நோக்கி செல்கிறேன். அங்கிருந்து சென்னை வழியாக மத்தியபிரதேசம் திரும்ப உள்ளேன் என்றார்.