/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாடக்கோட்டை குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
/
மாடக்கோட்டை குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
ADDED : ஜூன் 26, 2025 10:42 PM
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே இளையான்குடி ஒன்றியம் வண்டல் ஊராட்சி மாடக்கோட்டை பகுதியில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு காவிரி கூட்டு குடிநீர் உட்பட குடிநீர் திட்டங்கள் எதுவும் முறையாக செயல்படுத்தப்படாததால் கிராமத்தினர் குடிநீருக்கு கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியிடப்பட்டது. தினமலர் செய்தி எதிரொலியாக,மாடக்கோட்டை பகுதிக்கு புதிதாக குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு நேற்று முதல் குழாய் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.
பல ஆண்டுகளாக நிலவிய குடிநீர் பிரச்னைக்கு தற்போது நிரந்தர தீர்வு ஏற்பட்டுள்ளதால் தினமலர் நாளிதழுக்கும், அதிகாரிகளுக்கும் கிராமத்தினர் நன்றி தெரிவித்தனர்.