UPDATED : ஜூலை 18, 2026 04:02 PM
ADDED : ஜூலை 18, 2026 03:20 PM
அ நிறம் | அளவு
கமுதி: கமுதி அருகே ஒச்சதேவன்கோட்டை கிராமத்தில் தந்தை பொன்னையாவை மகன் சிவா போதையில் அரிவாளால் வெட்டினார்.
கமுதி அருகே ஒச்சத்தேவன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பொன்னையா 52. இவரது மனைவி 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். மகன் சிவா 22, இருவரும் தனியாக வசித்து வந்தனர். சிவா அடிக்கடி மது போதையில் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஜூலை 17 அன்று போதையில் சிவா பொன்னையாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த சிவா அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த பொன்னையா கமுதி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோவிலாங்குளம் போலீசார் சிவாவை கைது செய்தனர்.
